September 30, 2023 7:31 am
adcode

ஃபேஸ்புக் என்று அழைக்கப்பட்டு வந்த நிறுவனம் மெட்டா என்ற புதிய பெயரைப் பெற்றிருக்கிறது; மெட்டா என்பது அவ்வளவு முக்கியமா?

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபலமான செயலிகள் / இணையதளங்கள் அனைத்தும் தொடர்ந்து அதே பெயரில்தான் இருக்கும். ஏனெனில் இப்போதைக்கு மெட்டா என்பது அனைத்து தளங்களின் தாய் நிறுவனத்துக்கான மறுபெயர் மட்டுமே.

இந்தப் பெயரே, தொழில்நுட்பத்தின் அடுத்த அத்தியாயத்தில் – இணையத்தின் எதிர்காலமாகக் கவனிக்கப்படும் மெட்டாவெர்ஸ் என்ற முப்பரிமாண தொழில்நுட்பத்தில் பங்கேற்க மக்களை அழைக்கிறது.

ஆனால் மார்க் சக்கர்பெர்க்கின் புதிய தொலைநோக்கில் பங்கேற்கும் அளவுக்கு அந்த நிறுவனத்தை மக்கள் நம்புவார்களா என்று சில நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

புதிய பெயரான மெட்டா என்பது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் அது குறித்த லட்சக்கணக்கான ஆன்லைன் தேடல்களை உருவாக்கியது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அவற்றில் கீழ்கண்ட பிரபலமான கேள்விகள் அடங்கும்:

மெட்டா என்றால் என்ன?

மெட்டா என்றால் என்ன பொருள்?

மெட்டா என்பது எதைக் குறிக்கிறது?

ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் மெட்டாவுக்கு பல்வேறு வரையறைகள் கிடைக்கின்றன. முன்னொட்டாகக் இது வரும்போது “மாற்றம், வரிசைமாற்றம், பதிலீடு, அப்பால், மேலே, உயர் நிலையில்” என்பது போன்ற பல பொருள்களைக் கொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தான் தேர்ந்தெடுத்த மெட்டாவுக்கு “அப்பால்” என்ற பொருள்பட விரும்புவதாகக் கூறுகிறது. அதே நேரத்தில் அது ஒரு வகையான உருமாற்றத்தையும் விரும்புகிறது.

ஆவணக் கசிவுகள், எதிர்மறை பத்திரிகை விமர்சனங்களால் கறைபடாத ஒரு புதிய பிராண்டை வரவேற்கும் வாய்ப்பும் கூட இதன்மூலம் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கிடைக்கலாம். இருப்பினும் ஒரேயொரு பெயர் மாற்றத்தின் மூலம் நிறுவனத்துக்கு ஏற்கெனவே இருக்கும் சிக்கல்களை அழித்துவிட முடியாது என்று ஓர் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

ஆயினும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொண்டால் இந்தப் பெயர் எதிர்காலத்தைப் பற்றியது. ஃபேஸ்புக் அப்படித்தான் கூறுகிறது.

“எங்கள் புதிய பிராண்ட் எங்கள் நிறுவனம் எங்கு நோக்கிச் செல்கிறது என்பதையும் நாங்கள் உருவாக்க விரும்பும் எதிர்காலத்தையும் குறிப்பிடுகிறது” என்று மெட்டா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Share

Related News