March 24, 2023 4:58 am
adcode

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரிய பயிலுனர்களைப் பதிவு செய்யும் நிகழ்வு.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரிய பயிலுனர்களைப் பதிவு செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் (15) அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் பங்குபற்றிய ஆசிரிய பயிலுனர்கள் 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இஸட்-புள்ளி (Z-Score) மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களாவர் இவர்கள் கணிதம், விஞ்ஞானம், விசேட கல்வி, வர்த்தகமும் கணக்கீடும், ஆரம்பக்கல்வி மற்றும் இஸ்லாம் ஆகிய பாடநெறிகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

இவ்வருடத்துக்கான 203 ஆசிரிய பயிலுனர்களில் முதலாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே பதிவு செய்யப்படுகிறார்கள். இவர்கள் பதிவின் பின் வழமை போலன்றி இம்முறை வீடு செல்ல அனுமதிக்கப்படுவர் அத்துடன் இவர்கள் வீடுகளில் இருக்கும் போது எதிர்வரும் 2021.12.20 ஆம் திகதியில் இருந்து நிகழ்நிலை (Online) மூலம் திசைமுகப்படுத்தல் (Orientation) செயலமர்வு மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பீடாதிபதி தெரிவித்தார்.

 

– எம்.ஜே.எம்.சஜீத்

 

படங்கள்

 

Share

Related News