June 10, 2023 11:41 pm
adcode

அதிகரிக்கப்படுமா அரச ஊழியர்களுக்கு சம்பளம்?

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

எனவே, பட்ஜெட் அறிக்கை உரையின் போது தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது குறித்த பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share

Related News