October 2, 2023 11:29 pm
adcode

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு, விபரம்?

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நேற்று (14) ஆரம்பமானது.

இந்த கொடுப்பனவை 28 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 15 ஆயிரம் மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

3,500 ரூபா சமுர்த்தி கொடுப்பனவை பெற்றவர்கள் இன்று முதல் 4,500 ரூபாவை பெறத் தகுதி பெற்றுள்ளனர். அதேபோல் 2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்றவர்கள் 3,200 ரூபாவையும், 1,500 ரூபாவை பெற்றவர்கள் 1,900 ரூபாவையும் பெறவுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள சமுர்த்தி வங்கிகள் ஊடாக இந்தக் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

Share

Related News