தாங்க முடியாத வாழ்க்கைச் செலவுக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்துக்கும் எதிராக தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து இன்று [16ஆம் திகதி] முதல் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு கட்சியின் வாக்குக் குழுவிற்கும் அகப்பட மாட்டோம் என்பதை நிரூபிக்க இதுவே சிறந்த சந்தர்ப்பம் என்பதனால், அனைத்து பொதுமக்களையும் இன்று கொழும்புக்கு வருமாறு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் குழுவின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15ஆம் திகதி) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.