June 10, 2023 10:50 pm
adcode

அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்தவர்கள் கைது.

அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்த இரண்டு சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இரு சந்தேக நபர்களில், ஒருவரிடமிருந்து 43 லீற்றர் பெற்றோல், 28 லீற்றர் டீசல் மற்றும் 42 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றுமொரு சந்தேக நபரிடமிருந்து 200 லீற்றர் மண்ணெண்ணெய்யும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரும், 65 வயதுடைய ஆண் ஒருவரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இவர்கள் இன்று எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எம்பிலிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Related News