March 23, 2023 3:57 pm
adcode

அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானம்!

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

புதிய பிரதமரை நியமித்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும், தற்போதைய நெருக்கடிக்கு உரிய பதில் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பேச்சாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Related News