கடந்த வாரத்தில் அனுராதபுரம் மாவட்டத்தினுள் கொவிட் தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 5 நாட்களில் மாத்திரம் மாவட்டத்தில் 650 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் சிலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.