25 வருட காலமாக நீடிக்கும் ‘அதிபர் – ஆசிரியர்களின்’ சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாஙகத்திற்கு அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று (10) நடைபெற்ற சந்திப்பின்போது தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்Js;sdu;
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகமாக 30 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தச் சந்திப்பின் போது தெரிவித்தார். வரலாற்றில் முதல் தடவையாக வரவு செலவுத் திட்டத்தில் 7.5 வீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவைச் சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபான்கொட அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவைச் சங்கம் நிறைவேற்றிய முன்மொழிவுகளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கையளித்தார்.
1997ம் ஆண்டிலிருந்து நிலவி வரும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை என்பதை இதன் போது அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டனர்.