April 1, 2023 1:02 am
adcode

அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தம்.

அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுநிருபம் நேற்று அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டு;ள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு மாதாந்தம் உரித்தாகும் 225 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக விசேட கடமைக்காக செலுத்தப்படும் எரிபொருள் கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடமைகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதால் தூர இடங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்களை முடிந்தளவு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Share

Related News