இம்மாத அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து இலங்கை தற்போது சரியான பாதையில் செல்வதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள ஏப்ரல் மாத அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.