June 10, 2023 11:41 pm
adcode

அரச விடுமுறை அத்தியாவசிய சேவைகளை கொண்டு நடத்துவதற்கு தடையாக அமையாது.

நாளை (11) யும் நாளை மறுதின(12) மும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் , மாகாண சபைகள் ,மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே,ஜே. ரத்னசிரி அறிவித்துள்ளார்.

இதேவேளை ,வங்கிச் சேவைகள் நாளையும் நாளைமறுதினமும் இடம்பெறும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 11ம், 12ம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், மக்களின் வசதி கருதி குறித்த தினங்களில் வங்கிகள் வழமை போன்று செயற்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை ,நாளை (11) யும் நாளை மறுதின(12) மும் அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை கொண்டு நடத்துவதற்கு தடையாக அமையக்கூடாது என்றும் பொது சேவைகள் , மாகாண சபைகள் ,மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே,ஜே. ரத்னசிரி அறிவித்துள்ளார்.

holiday

Share

Related News