June 10, 2023 11:17 pm
adcode

“அரபு வசந்தம் ஒன்றை இந்நாட்டில் ஏற்படுத்துவோம்”; ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊடக அறிக்கையின் தமிழ் வடிவம்

நுகேகொடை ஜூபிலி சந்தி அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருந்த திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதிகள் குழுவொன்று கலவரத்தில் ஈடுபட்டு, வன்முறை நிலையை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.

இரும்புக் கம்பிகள், தடிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு மிரிஹான பெங்கிரி வத்தையில் உள்ள ஜனாதிபதி அவர்களின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று, கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதிகள் என உறுதியாகியுள்ளது.

அவர்கள் அரபு வசந்தம் ஒன்றை இந்நாட்டில் ஏற்படுத்துவோம் என்று கோஷமிட்டவாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மிகவும் திட்டமிட்ட அடிப்படையில், பெயர் குறிப்பிடாது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, மக்களைத் தூண்டிவிட்டு நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
01.04.2022

Share

Related News