இன்று(24) பாடசாலைக்குச் சென்று சிரமதானப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் கல்வி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும், அதிபர்களையோ ஆசிரியர்களையோ சிரமதான வேலைகளில் ஈடுபடுத்த போவதில்லை என அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி நேற்று (23) அறிவித்துள்ளது.
மேலும், திங்கள் முதல் கற்றல் பணிகளை மாத்திரமே மேற்கொள்ளப் போவதாக குறித்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாளை(25) பி.ப 1.00 மணிக்கு பின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்கு அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.