நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சமீபத்தில், ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரதனாவின் செல்ல நாய் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இதனையடுத்து, பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆதர்ஷா கரந்தனவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியதுடன், ஆஷு மாரசிங்க மிருக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகவியலாளர்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்தி பேராசிரியர் ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக மக்கள் கருத்து தவறாக உருவாக்கப்பட்டதாக, ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷ கரதனவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் கோரி இடைக்கால மேன்முறையீட்டை ஆஷு மாரசிங்க தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, கடந்த 31ஆம் திகதி, பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.