சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்று (27) ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரையிலும் திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
– அரசாங்க தகவல் திணைக்களம்