இலங்கையின் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக சீனா ஒரு மில்லியன் டோஸ் சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
பரவலாகப் பயன்படுத்தப்படும் சினோபார்ம் தடுப்பூசிக்குப் பிறகு இலங்கை பயன்படுத்தும் 2 வது சீன தடுப்பூசி இதுவாகும்.