75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக இன்று (பிப்ரவரி 04) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (பிப்ரவரி 03) மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு போராட்டங்கள் நடத்தக்கூடாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை அதிகாரி ஒருவர் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்படி கொண்டாட்டங்களுக்கு எதிராக நேற்று பிற்பகல் ‘சத்தியாகிரகம்’ ஆரம்பிக்கப்பட்டது.
காலிமுகத்திடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் போராட்ட இயக்கங்கள் மற்றும் பலர் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் நேற்று நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், அவ்வாறான அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.