September 30, 2023 7:57 am
adcode

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விமானப் பயணச் சீட்டுகளின் விலைகளும் அதிகரிப்பு.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து விமானப் பயணச் சீட்டுகளின் விலைகளும்; 27 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 203 ரூபாய் 60 சதமாக இருந்த நிலையில், இன்று அதன் பெறுமதி 259 ரூபாய் 99 சதமாக அதிகரித்துள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Related News