ஒரு லட்சத்து இருபதாயிரம் Gas சிலிண்டர்களை பகிர்ந்தளிக்கும் பணி இன்று (18) ஆரம்பமாகும் என லிற்றோ காஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களில் இருந்து 3,500 மெட்ரிக் தொன் காஸ் தற்போது இறக்கப்பட்டுள்ளது.ஒரு லட்சத்து 20ஆயிரிம் காஸ் நிரப்பிய சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைக்கும் விநியோகிப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை ,கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் இரண்டு கப்பல்களில் உள்ள டீசலை இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் நிலவிய பிரச்சினை தற்போது நிவர்த்திக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் நேற்று பெற்றோல் மற்றும் டீசல் பௌசர்கள் அனுப்பப்பட்டதாக அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.