September 26, 2023 10:06 pm
adcode

இன்று (05) முற்பகல் கண்டிக்கு வருகைத் தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று (05) முற்பகல் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை, தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக வருகை தந்திருந்த பொதுமக்களும், ஜனாதிபதி அவர்களுக்கு அமோக வரவேற்பளித்தனர். இதன்போது அந்த மக்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அவர்களின் நலன் விசாரித்தறிந்து கொண்டார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

05.01.2022

Share

Related News