June 10, 2023 10:48 pm
adcode

இன்று(20) இலங்கைக்குக் கிடைக்கவுள்ள 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல்.

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று(20) இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகை இதுவாகும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து, சீமெந்து, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தக் கடன் மூலம் வழங்கியது.

அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின்போது இதற்கான உடன்படிக்கை சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இந்தியா, இதற்கு முன்னரும் ஒன்று தசம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

Share

Related News