இலங்கை மின்சார சபை(C.E.B) இன் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (22) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னதாக வௌியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய A.B.C பகுதிகளுக்கு பிற்பகல் 4.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரையிலான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியால மின்வெட்டு அமல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும், ஏனைய பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் 3 மணித்தியாலம் மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.