September 26, 2023 10:28 pm
adcode

இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கு நேற்று முதல் அனுமதி!!!

இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தனியார் துறையினர் நேற்று(24) முதல் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கபபடுவதாக விவசாய அமைச்சர் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24)  நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ,இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,இந்தவிடயம் குறித்து கடந்த 2021 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பும் இரத்து செய்யப்படுவதாகவும் கூறினார்.

அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு இன்றிரவு வெளியாகும் என்றும் விவசாய  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Related News