March 28, 2023 1:34 pm
adcode

இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றி இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள மாணவர்களுக்கு மாத்திரமே பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு அனுமதி!!

இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்ட மற்றும் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றி இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள மாணவர்களை மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

மாணவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளார்களா என்பதை எவ்வாறு கண்டறியப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தடுப்பூசி ஏற்றப்பப்பட்ட ஆவணத்தை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதுடன் ,பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய ஆரம்பிப்பதற்கான பொறுப்பை உபவேந்தர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத மாணவர்களுக்கு அடுத்த வாரம் தொடக்கம் பல்கலைக்கழகங்களில்  தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

மேலும், பல்கலைக்கழகங்கள் பல கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரினர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

 

பரிந்துரைகளுக்கு அமைய, எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும்  பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறினார்.

 

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை  உபவேந்தர்கள், தொற்றுநோய் தடுப்பு பிரிவினர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, பரீட்சைகள் மற்றும் செயன்முறை பரீட்சைக்கு பயிற்சி பெறுவோருக்கு முன்னுரிமை வழங்கி, முதற்கட்டத்தில் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பேராசிரினர் கூறினார்.

இதுதொடர்பில் உபவேந்தர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Share

Related News