இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அல்லது காய்ச்சல் குறைந்தும் உடலில் ஏதும் மாற்றங்கள் இருந்தாலும் இரத்தப் பரிசோதனைக்காக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். போதிய நீராகாரம் மற்றும் ஓய்வை உறுதி செய்யுங்கள்.
டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகருக்கு சுயமாகவே முன்சென்று ஒத்துழைப்பு வழங்குங்கள். டெங்கு நோய் மிகவும் ஆபத்தானது உங்களின் பாதுகாப்பு உங்களின் கரங்களில் என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மழை நீர் தேங்கி நின்று நுளம்புகள் அதிகமாகி டெங்கு நோயைப் பரப்பி வருகிறது. தனியே சுகாதாரத் துறையினரால் மாத்திரம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்கள் தமது வீடு வளவுகளில் தினமும் 15 நிமிடங்களை நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்கள் மற்றும் இடங்களை அகற்றி துப்பரவு செய்வதில் கவனம் செலுத்துமாறும் வைத்திய அதிகாரி பிரதேச மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
பயன்படுத்தப்படாத வீடுகள், வளவுகள் மற்றும் கட்டட நிர்மாணம் நடைபெறும் இடங்களிலும் அவதானம் செலுத்துங்கள்.
கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகளை நுளம்புகள் நுழையாத வண்ணம் நுளம்பு வலைகளினால் மூடுங்கள். வீட்டு மாடிகள் மற்றும் கூரைப் பீலிகளில் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அவர் சுட்டிக்காட்டியுன்னார்.