October 2, 2023 11:11 pm
adcode

இரண்டு மாதங்களில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிபு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 4ஆயிரத்து 911 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் 10 ஆயிரத்து 688 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து309 ஆகும். அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் குறிப்பட்டுள்ளது.

Share

Related News