October 2, 2023 11:48 pm
adcode

இலக்கங்களை மாற்றாமல் சேவையாளரை மாற்றும் வசதி விரைவில்

கையடக்க தொலைபேசி இலக்கங்களை மாற்றாமல், வலையமைப்புகளை மாற்றிக்கொள்ளும்  வசதி இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படுமென இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹெலசிறி ரணதுங்க தெரிவித்தார்.

இதற்கான தரவுத்தளமொன்றை நான்கு கையடக்க தொலைபேசி சேவை வழங்குநர்களும் மூன்று நிலையான தொலைபேசி சேவை வழங்குநர்களும் இணைந்து கட்டமைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, வணிக ரீதியிலான 5G சேவையை வழங்குவதற்கான ஏலத்தை இவ்வாண்டு இறுதிக்குள் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹெலசிறி ரணதுங்க தெரிவித்தார்.

5G சேவையை பரிசோதிப்பதற்கான அலைக்கற்றை தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share

Related News