இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள மூன்று தீவுகளில் மின்சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் சீன நிறுவனமொன்றுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சீனா குறித்த மின்சக்தி திட்டத்தை கைவிட தீர்மானித்திருந்த பின்னணியிலேயே, அதானி நிறுவனத்திற்கு வடக்கின் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை கையளிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் விசேட சலுகைகளை வழங்கி, நாட்டின் வெளிவிவகார கொள்கைகள் நிலையில்லாது காணப்பட்ட நிலையில், சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் காணப்பட்ட அதிகாரங்கள் தற்போது வலுவிழந்து வருவதாக சர்வதேச தொடர்புகள் குறித்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்