புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படும் அல்லது பலவந்தமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
“வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் வெளிநாட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படலாம் மற்றும் வெளிநாட்டவர்களின் விருப்பப்படி இலங்கை ரூபாயாக மாற்றப்படும்” என மத்திய வங்கி மேலும் கூறியுள்ளது.