April 1, 2023 1:18 am
adcode

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு – இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்

இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பான் செயற்பட்டு வருவதாகவும், ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mishukoshi Heidiaki தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு ,70 வருடங்கள் 2022ஆம் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, கண்டி புனித தலதா மாளிகை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

தலதா மாளிகைக்கு வருகை தந்த தூதுவரை, சர்வதேச அலுவல்கள் அமைச்சின் செயலாளர் காமினி பண்டார வரவேற்றார். பின்னர், தூதுவர் புனித சின்னத்தை வழிபட்டார். சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் குறிப்பு எழுதி, நினைவுப் பரிசையும் வழங்கினார்.

அதன்பின்னர் தலதா மாளிகையிலுள்ள சர்வதேச பௌத்த அருங்காட்சியகத்தில் உள்ள ஜப்பானிய கண்காட்சிக் கூடத்தையும் அவர் பார்வையிட்டார்.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Share

Related News