இலங்கை தாதியர்களுக்கும் ஏனைய சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கும் பிரித்தானிய சுகாதாரத் துறையில் தொழில் புரிவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக இதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இந்த தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கு பிரித்தானியாவினால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
அத்துடன் IELTS ஆங்கில மொழி திறமைக்கான பரீட்சையில் சித்தி அடைந்திருப்பது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.