September 26, 2023 10:25 pm
adcode

இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் இந்திய நடிகர்.

திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ள இந்திய நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி விடுமுறையில் இலங்கை வந்துள்ளார்.

தனது விடுமுறையை ‘லெட்ஸ் லங்கா’ என அழைத்த ஆஷிஷ் வித்யார்த்தி, இலங்கைக்கு வந்ததை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இலங்கை ஒரு அழகான நாடு என வர்ணித்த நடிகர் தனது ரசிகர்களையும் நலம் விரும்பிகளையும் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கையை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதற்கும் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் சர்வதேச செல்வாக்கு வசதி திட்டத்தின் கீழ் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தால் அழைக்கப்பட்டுள்ளார்.

 

அவருடைய வீடியோ

https://fb.watch/ijcAuM1kZv/

Share

Related News