September 26, 2023 8:24 pm
adcode

இலங்கையின் தற்பதைய பொருளாதார நிலைமை குறித்து உலக வங்கி தெரிவித்துள்ள விடயம்.

கொவிட் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணைய வழி மூலமான நிகழ்வில் கலந்து கொண்ட போது இதனை தெரிவித்த அவர் .இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி 4 வளர்ச்சி வேகம் 4M க்கும் மேலாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

‘கொவிட் தொற்றினால், பல பிரச்சினைகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

 

அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உண்டு. முக்கிய பிரச்சினை, மொத்த உற்பத்திக்கு அமைவாக நடைமுறையிலுள்ள கடன் அதிகமாக இருப்பதயாகும்.

எதிர்காலத்தில் கடனைச் செலுத்தும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பது முக்கிய தேவையாகும்.

 

விலைக் கட்டுப்பாட்டிற்காக இறக்குமதியைத் தடை செய்வது மற்றும் கடனைப் பெறுவதற்காக வெளிநாட்டு நாணயத்தைத் திரட்டுவது போன்ற கடுமையான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Related News