இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பானிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக உறுதியளித்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.
இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நேற்று மாலை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டக்கி ஷுன்சுகேவை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வரவேற்றார்.
அவரது நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் இரு இராஜாங்க அமைச்சர்களும் சிறிது நேரம் கலந்துரையாடினர்