September 26, 2023 10:10 pm
adcode

இலங்கையில் இரண்டு துறைகளுக்கு சீனாவில் இருந்து இலவச டீசல்.

“சூப்பர் ஈஸ்டர்ன்” என்ற எண்ணெய் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

மாதிரி சோதனைக்குப் பிறகு 10.6 மில்லியன் லிட்டர் டீசல் இறக்கும் பணிகள் ஆரம்பமாகும். இது எரிசக்தி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்படும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்படும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 10.6 மில்லியன் லிட்டர் டீசல் நன்கொடையாக வழங்கவும், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இம் முடிவு எட்டப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

Share

Related News