September 28, 2023 2:37 am
adcode

இலங்கையில் ‘விபசாரம்’ என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு!!!

இலங்கையில் ‘விபசாரம்’ என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்று, தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனைத் தெரிவித்திருந்தார்.

இரவு நேர பொருளாதாரம் என்ற பதத்திற்குள், ஹோட்டல் வியாபாரம், உணவகங்கள், மதுபானசாலைகள், பாலியல் தொழில் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி இதுவரை இல்லாத பின்னணியில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களே பாலியல் தொழிலைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற இடத்திற்கு வந்துள்ளனர்.

பாலியல் தொழில் என்ற விடயம் புத்த பெருமானின் காலத்திலிருந்து காணப்படுவதாக ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவிக்கின்றார்.

அரச தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற விவாதமொன்றின் போதே அவர் இந்த கருத்தினை முன்வைத்திருந்தார்.

கோகிலா குணவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த கருத்துக்கு ஒரு சில தரப்பு ஆதரவு வழங்கிய வருகின்ற நிலையில், மற்றுமொரு தரப்பு எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை முச்சக்கரவண்டி சாரதிகள், இடை த்தரகர்கள் என அனைத்து தரப்பினரும் மோசடி செய்து வருகின்றனர்.

இதைவிட, தனது உடலை விற்பனை செய்து, வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு, பாலியல் தொழிலை சட்டமாக்கிக் கொடுக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் கஷ்டத்தில் விழ மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்.

இதைச் சட்டமாக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள், சிறைச்சாலைகளுக்கு செல்லாது, தமது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என அவர் கூறுகின்றார்.

பாலியல் தொழில் சட்டமாக்கப்படும் பட்சத்தில், திருமண பதிவுகளின் போது தொழில் என்ற இடத்தில் ‘விபசாரம் ‘ என்பதனை குறிப்பிட்டு, அதனை ஆண் ஏற்றுக்கொள்வாராயின், அது சாத்தியமானது என உமாசந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

அதைவிடுத்து, பாலியல் தொழிலை சட்டமாக்கும் கருத்தானது, நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என பெண் சமூக செயற்பாட்டாளர் உமா சந்திரா பிரகாஷ் குறிப்பிடுகின்றார்.

Share

Related News