மட்டக்குளிய பிரதேசத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தில் வந்த இருவரினால் குறித்த நபர் தாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.