September 28, 2023 4:01 am
adcode

உக்ரேனில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம்?

உக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்சமான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், பகைமையை உடனடியாக நிறுத்துவதற்காகப் பணியாற்றுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கின்றது.

இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடலின் மூலம் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது அவசியம் என இலங்கை வலியுறுத்துகின்றது.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு.

2022 பிப்ரவரி 25

Share

Related News