தற்போதைய உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிப்பதில்லை என அண்மையில் மின்சார அமைச்சும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், தொடர்ச்சியாக மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.
இதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவை அவதூறு செய்தமை மற்றும் நடைமுறைப்படுத்த தவறியமைக்காக மின்சார சபை மற்றும் அமைச்சுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.
இது தொடர்பான ஆவணங்கள் இன்று (27) உசயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம். பி. டி. யு. மாபா பத்திரன, இலங்கை மின்சார சபையின் தலைவர் எம். எஸ். இளங்ககோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.