உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு திங்கட்கிழமை (30) தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கருத்து தெரிவிக்கையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் தேவையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி திங்கட்கிழமை (30) அல்லது செவ்வாய்க்கிழமை (31) அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகத்திற்கு இன்னும் அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திரெந்தமை குறிப்பிடத்தக்கது.