உலகின் முதல் குறுஞ்செய்தி ஒரு இலட்சத்து 49,729 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அகாடஸ் என்ற நிறுவனம் நடத்திய ஏலத்திலேயே அது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
1992 டிசம்பர் 3 ஆம் திகதி, நீல் பெப்வேர்த் என்ற பிரிட்டிஷ் மென்பொருள் பொறியியலாளர், வோடாபோன் Vodafone phones
தொலைபேசி வலைப்பின்னலை (நெட்வொர்க்கை) பயன்படுத்தி உலகின் முதல் குறுஞ்செய்தியை வோடாபோன் நிறுவனத்தின் பணிப்பாளர் ரிச்சர்ட் ஜாவிஸி Richard William Hart Jarvis ற்கு அனுப்பியுள்ளார்.
அவரது ஓர்பிடெல் 901 என்ற கையடக்கத் தொலைபேசியில் அந்த குறுஞ்செய்தி வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த வரலாற்று செய்தி குறுஞ்செய்தியில் மெரி கிறிஸ்மஸ் ‘Merry Christmas’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.