ஊழலை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
9ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான விதிகளை சட்டத்தில் புகுத்துவதற்கு உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நோயாளி குணமடைந்தவுடன் மற்றொரு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்தகைய மற்றொரு நெருக்கடியின் அனைத்து சாத்தியக்கூறுகளையும் நீக்குதல். இதற்காகவே ஊழல் தடுப்பு சட்டமூலததை கொண்டு வருகிறோம். உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான முயற்சிகளை இந்த மசோதாவில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாகும்.”
ஜனாதிபதி, “நான் பிரபலமாக இருக்க விரும்பவில்லை. இந்த நாடு விழுந்துள்ள நெருக்கடியில் இருந்து மீண்டு வர விரும்புகிறேன்,’‘ என்றார்.
2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை “ஒற்றை இலக்கத்திற்கு” கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2026 ஆம் ஆண்டுக்குள் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீள முடியும் என்றும் அவர் கூறினார்.
“இந்தச் சிரமத்தை 5 முதல் 6 மாதங்கள் வரை நீங்கள் தாங்கிக் கொண்டால், நீங்கள் ஒரு தீர்வை அடையலாம். இப்படியே தொடர்ந்தால், மூன்று மற்றும் நான்காவது காலாண்டுகளில், அரசு ஊழியர்களுக்கு மேலதிக உதவித்தொகை வழங்க முடியும். தனியார் துறை ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்படலாம். நாட்டு மக்களின் கைகளை இன்று விட வளமானதாக மாற்ற முடியும். வேலைவாய்ப்பின் மூலம் வருமானம் பெருகும். வங்கி வட்டியை குறைக்கலாம். இன்னும் 3 ஆண்டுகளில், நாட்டு மக்கள் இன்று பெறுவதை விட 75% மேலதிக வருமானத்தைப் பெற முடியும்.