October 2, 2023 11:25 pm
adcode

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈடு.

கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி தீ பரவலுக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இரண்டாம் கட்ட நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக , 1.75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்வரும் வாரம் தொடக்கம் நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாக அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி  இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட வலயங்களாக பெயரிடப்பட்ட கம்பஹ, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் கடற்றொழிலாளர்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழ், கப்பல் பாதுகாப்பு நிறுவனத்தினால் 420 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Share

Related News