எதிர்காலத்தில் உருவாகின்ற தொற்று நிலை தற்போதைய கொவிட் தொற்றை விட கொடியதாக இருக்கும் என்பதனால் அதற்கு முழு உலகும் தயாராக இருக்க வேண்டும் என்று Oxford – Astra Zeneca தடுப்பூசி தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 வைரஸின் பரவலில் கற்றுக்கொண்ட பாடங்களை மறக்காமல் வைரசுக்கு எதிராக முழு உலகமும் உறுதியுடன் செயல்பட வேண்டும். என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் Johns Hopkins University)Sarah Gilbert பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, கோவிட் -19 வைரஸ் தொற்றால் உலகளாவிய ரீதியில் 5.26 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
மற்றும் பொருளாதாரத்திலிருந்து டிரில்லியன் கணக்கான டொலர்களை அழித்துள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மிகக் குறுகிய காலத்தில் மாற்றியுள்ளது.
‘உண்மையில், எதிர்காலத்தில் உருவாகக் கூடிய வைரஸ் தற்போதைய நிலையை விட இன்னும் ஆபத்தானதாக மாறக்கூடும். ஒரு வைரஸ் நம் உயிரையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்தும் கடைசி நேரமாக இருக்காது.
அடுத்த வைரஸுக்கு உலகம் சிறப்பாகத் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் அடைந்த முன்னேற்றம் மற்றும் நாம் பெற்ற அறிவை இழக்கக்கூடாது. என்று Oxford – AstraZeneca தடுப்பூசியை உருவாக்கிய சாரா கில்பர்ட் Sarah Gilbert தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் பரவக்கூடிய தொற்றுநோய்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஆண்டுக்கு 10 பில்லியன் டொலர் பணம் ஒதுக்க முன் மொழியப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.