இந்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வருமான வரிக்கு நிவாரணம் வழங்க முடியாது என திறைசேரி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு முன் நிபந்தனையாக அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த வருமான வரி விதிக்கப்பட்டுள்ளதாக திறைசேரி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், திறைசேரிக்கு வேறு வழியில்லை என்றார்.
எவ்வாறாயினும், நீண்டகாலமாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தை தொடர்ந்தும் தக்கவைக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணையை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஓரளவு நிவாரணம் குறித்து பரிசீலிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.