விசேட தேவைகளைக் கொண்டவர்களுக்காக ஒரு கேந்திர மத்திய நிலையம் எதிர்வரும் 23ஆம் திகதி, தகவல் திணைக்களத்தில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாட்டில் விசேட தேவைகளைக் கொண்டவர்களின் எண்ணிக்கை எட்டு தசம் இரண்டு வீதமாகும். இவர்களது பேச்சுரிமை மதிக்கப்படவேண்டும் இவர்களும் ஏனையோரைப்போன்று நடத்தப்படவேண்டும் என்ற பரந்துப்பட்ட நோக்கத்துடன் கேந்திர மத்திய நிலையத்தை ஆரம்பிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
சிறு பிள்ளைகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்காக உணர்வுபூர்வமாக ஊடகங்களை பயன்படுத்துமாறு அமைச்சர் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கேட்டுக்கொண்டார். .