எதிர்வரும் 8 தினங்களுக்கு மின் உற்பத்திக்கு தேவையான 10 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மின்சார சபைக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ,இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் நேற்று மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அமெரிக்க டொலர்கள் மூலம் இரண்டு கப்பல்களில் 35 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உதய கம்பன்பில மேலும் தெரிவிக்கையில் ,நாளாந்த மின் உற்பத்திக்கு 1500 மெற்றிக் தொன் தேவைப்படுவதாகவும் கூறினார்.
இதன் காரணமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை டீசலில் 10 ஆயிரம் மெற்றிக் தொன்னை மின்சார சபைக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.