எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு பகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்ற போதும் நாட்டில் எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சனிக்கிழமைகளில் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.