எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகள் இன்றுடன் நிறைவடைவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக அதிகளவான எரிபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் முடிவடைந்துள்ளன.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் சுமார் 3,200 மெட்ரிக் டொன் பெற்றோலை விநியோகம் செய்கின்றது. இருந்த போதிலும் நேற்று முன்தினம் (15) கூடுதலாக mjhtJ 600 மெட்ரிக் டொன் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளாந்தம் 5,200 மெட்ரிக் டொன் டீசல் விநியோகிக்கப்படுவதாகவும், நேற்றைய தினம் அதற்கும் மேலதிகமாக டீசல் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த சில நாட்கள் இரவு 10 மணிக்கு மேலாகவும் எரிபொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விநியோக பவுசர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த மாதம் வரைக்கும் தேவையான எரிபொருட்கள் எரிபொருட்கள் பெறுகைக்கான மேற்கொள்ளபட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்